இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்

அமைச்சர் பாண்டியராஜன் மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து, பேரவையில் இருந்து தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.
x
இலங்கை தமிழர்களுக்கான இரட்டை குடியுரிமை விவகாரத்தில், அவை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாகக் கூறி, தி.மு.க உறுப்பினர் தங்கம்தென்னரசு உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார்.  இது குறித்து விளக்கம் அளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன்,  இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்றார். இதை ஏற்ற சபாநாயகர் தனபால், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மீது எவ்வித உரிமை மீறல் இல்லை என தீர்ப்பு அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்