ஈரோட்டில் அடுத்தடுத்து சிக்கிய முக்கிய கொள்ளையர்கள் - 105 சவரன் நகைகள் மீட்பு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து பெருமளவு தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோட்டில் அடுத்தடுத்து சிக்கிய முக்கிய கொள்ளையர்கள் - 105 சவரன் நகைகள் மீட்பு
x
ஈரோடு மாவட்டத்தில் நடந்த திருட்டு குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், உத்திரவின்படி,   தனிப்படை அமைத்து தேடியதில், திருமங்கலம், பரமக்குடி ஐயப்பன் ஆகிய இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, முத்துராஜ், மகேந்திரன், அன்புமணிகண்டன் என அடுத்த‌டுத்து சிக்கிய கொள்ளையர்களிடம் இருந்து, 46 சவரன் தங்க நகைகள், ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இதேபோல, சென்னிமலையை சேர்ந்த பாலாஜி என்பவரை பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 17 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தமாக சிக்கிய 6 கொள்ளையர்களிடம் இருந்து மொத்தம் 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 105 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த குற்றவாளிகளை கைது செய்ய கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியதாக கூறியுள்ள காவல்துறையினர், கடைகள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்