தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசு மீது அதிருப்தி?

தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒப்புக்கொண்டப்படி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசு மீது அதிருப்தி?
x
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய வரிகளில் இருந்து மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.02 சதவீதத்திலிருந்து 4.18 சதவீதமாக சிறிய அளவே உயர்ந்துள்ளதாகவும் நிதிப்பகிர்விற்கு பிறகு 74,340 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க நிதிக் குழு பரிந்துரைத்த நிலையில் அதை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு விட்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

மானியத் தொகையை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2019 - 20 நிதி ஆண்டில் 7 புள்ளி 7 சதவீதம் என மதிப்பிடப்பட்ட வளர்ச்சி இந்திய அளவில் கணிக்கப்பட்ட 5 சதவீதத்தை காட்டிலும் அதிகம் எனவும் தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்