குரூப் 4 குரூப் 2ஏ, விஏஒ தேர்வு முறைகேடுகள் - 43 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ,2ஏ மற்றும் 2016 விஏஓ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு சொந்தமான இரண்டு கார்கள் மற்றும் 7 லட்ச ரூபாய் பணத்தை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
குரூப் 4 குரூப் 2ஏ, விஏஒ தேர்வு முறைகேடுகள் - 43 பேர் கைது
x
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 4 அரசு ஊழியர்கள், மற்றும் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற 9 பேர், ஜெயக்குமார் உள்ளிட்ட 3 இடைத்தரகர்கள், என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோன்று டிஎன்பிசி குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு ஊழியராகள் 16 பேர் மற்றும் 3 காவலர்கள் என மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஒ தேர்வு முறைகேட்டில் மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கைது செய்துள்ளனர்.  ஆக மொத்தம், குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு, மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வு முறைகேடு என மூன்று தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இதுவரை 43 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு சொந்தமான இரண்டு கார்கள் மற்றும்  7 லட்ச ரூபாய் பணத்தை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்