ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்- நெல்லையில் அமமுகவுக்கு அனுமதி

மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட அ.ம.மு.க.வுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்- நெல்லையில் அமமுகவுக்கு அனுமதி
x
மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட அ.ம.மு.க.வுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர் அ.ம.மு.க. சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவிரி 24 ஆம் தேதி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடத்த அனுமதி கோரப்பட்டது. மாவட்ட போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறிய மனுவில், தனியார் இடத்தில் கூட்டம் நடப்பதாகவும், தென் மாவட்டத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திர, பிறந்தநாள் கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்