"வடமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்க முடியாது" - மகளிர் சுய உதவி குழுவினருக்கு அமைச்சர் சரோஜா அறிவுரை

நாமக்கல் மருத்துவக் கல்லூரி பணிகளில் வடமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்கமுடியாது என அமைச்சர் சரோஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்க முடியாது - மகளிர் சுய உதவி குழுவினருக்கு அமைச்சர் சரோஜா அறிவுரை
x
நாமக்கல் மருத்துவக் கல்லூரி பணிகளில், வடமாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்கமுடியாது என அமைச்சர் சரோஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட  பட்டணத்தில், மகளிர் சுயஉதவிக்குழு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மருத்துவ கல்லூரி பணிகளில் தகுதியுள்ள மகளிர் சுயஉதவிகுழுவினர் சேர வேண்டும் என அறிவுரை வழங்கினார். பகுதி மக்கள் சேரவில்லை என்றால் வடமாநிலத்தவர்கள் பணியில் சேருவதை தடுக்கமுடியாது என எச்சரிக்கை விடுத்தும் பேசினார். தமிழக வேலைகளில் வடமாநிலத்தவர் சேர்வதை தடுக்க முடியாது என அமைச்சர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்