குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - மதம் பிடித்த யானையால் மக்கள் அச்சம்

பொள்ளாச்சி அருகே கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டுயானை மதம்பிடித்து சுற்றி திரிகிறது.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - மதம் பிடித்த யானையால் மக்கள் அச்சம்
x
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, குரங்கு அருவி, நவமலை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டுயானை மதம்பிடித்து சுற்றி திரிகிறது. இந்நிலையில் நவமலை மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இந்த காட்டு யானை, அங்குள்ள மரக்கிளையை ஒடித்துவிட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்