தியாகியின் ஓய்வூதியத்திற்காக போராடும் மகள் - நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் மறுக்கப்படும் ஓய்வூதியம்

தனி ஒரு பெண்ணாக வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் அவதி பட்டுவரும் பெண் ஒருவர் தன் தந்தையின் தியாகி பென்சனை பெற பல ஆண்டுகளாக போராடி வருகிறார்...
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இந்திய சுதந்திர போராட்ட தியாகியான இவர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடமிருந்து தாமரை பட்டயமும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2002ம் ஆண்டு தியாகி மாடசாமி உயிரிழந்த நிலையில், அவரது மகள் இந்திரா தந்தையின் தியாகி பென்சன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத‌தால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்திரா வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, தியாகி மாடசாமி மகள் இந்திராவுக்கு பென்சன் வழங்கலாம் என  கடந்த 2014 ஆம் ஆண்டு  நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதன் பிறகும், பென்சன் வழங்கப்படாத‌தால், தனி ஒரு பெண்ணாக வீட்டு வாடகை கூட கொடுக்க வழியில்லாமல் இந்திரா அவதி பட்டு வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்