முறைகேடு உண்மையே - இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புதல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தனின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்தனர். ஓம் காந்தன் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது.  ஓம்காந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவனது  கூட்டாளிகள் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த அவர்கள் ஓட்டுனர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார், முறைகேடு நடந்த து உண்மையே என, சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்