தனியார் சொகுசு பேருந்தில் நகைகள் கொள்ளை : ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நூதனம்

சேலம் அருகே தனியார் சொகுசு பேருந்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் சொகுசு பேருந்தில் நகைகள் கொள்ளை : ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நூதனம்
x
கோவையை சேர்ந்த பிரபல நகைக்கடை ஊழியர் கவுதம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை எடுத்துக் கொண்டு, ஹைதராபாத்தில் இருந்து கோவை நோக்கி சென்றுள்ளார். தனியார் சொகுசு பேருந்தில் அவர் பயணம் செய்த போது, சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சுங்கச்சாவடி அருகே பேருந்து நின்றுள்ளது. அப்போது காலை உணவு சாப்பிட பேருந்து நிறுத்தப்பட்டதால் கவுதமும் பையை பேருந்தில் வைத்து விட்டு இறங்கியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் வைத்திருந்த பை மாயமானது. நகை இருப்பதை தெரிந்து கொண்ட ஒருவரே கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்