மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உடன் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலை இணைந்து நடத்த உத்தரவிட்டும், மாநில தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு தேர்தலை நடத்தவில்லை. இதனால் மாநில தலைமை தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கறிஞர் ஜெய்சுகின் நேரில் ஆஜராகி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில தலைமை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இதுவரை நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடவில்லை என வாதாடினார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி இதனை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story