நடிகர் சங்கத் தேர்தல் - தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத் தேர்தல் - தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு
x
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக விஷால் தரப்பில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்க பிரச்சினையில், நடுநிலையோடு செயல்படவில்லை என்றும், எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் தனி நீதிபதி இந்த தேர்தலை ரத்து செய்துள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 12ஆம் தேதி  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்