பழனி மலை அடிவாரத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் 6 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
பழனி மலை அடிவாரத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் 6 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. மின் இழுவை ரயில் நிலையம் எதிரே பராமரிப்பு இன்றி காணப்படும் தெப்பக்குளத்தில் மறைந்திருந்த 6 அடி நீள  மலைப்பாம்பு ஒன்று, அருகிலிருந்த பக்தர்கள் அறைக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்  அந்த மலைப்பாம்பை பிடித்தனர். வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு, பின்னர், அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்