"10024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம்" - ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

பத்தாயிரத்து 24 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் - ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
x
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்காக காய்கறிகள் வெளிச்சந்தையில் வாங்கப்படுகின்றன. இந்நிலையில், தேவையான காய்கறிகளை அந்தந்த சத்துணவை மையங்களிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் பங்காக 3 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக 2 கோடி ரூபாயும் என ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை ஆகியவை இணைந்து காய்கறி தோட்டங்களை அமைக்கவும், அவற்றை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்