"கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்" - தமிழிசை சவுந்தரராஜன்

கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கல்லூரி மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் - தமிழிசை சவுந்தரராஜன்
x
கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கல்லூரி மாணவர்களிடம் வலியுறுத்தினார். சென்னை மணலி அருகே அமைந்துள்ள திருத்தங்கல் நாடார் கல்லூரியில் 20 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இளங்கலை, முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார். மாணவர்கள், சக மாணவிகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் எனவும்  தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்