பழனியில் தைப்பூச தேரோட்டம் : குவிந்து வரும் ஏராளமான பக்தர்கள்

தைப்பூச திருவிழா பழனியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி, இன்று மாலை, தேரோட்டம் நடைபெற உள்ளது.
x
தைப்பூச திருவிழா பழனியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி, இன்று மாலை, தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக, காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தேரோட்டத்தை முன்னிட்டு, பழனியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவடி சுமந்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷமிட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரையே தெரியாத அளவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூச விழாவை ஒட்டி, கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வடலூரில்  தைப்பூச திருவிழா : ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்


கடலூர் மாவட்டம் வடலூரில் , வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 149வது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்