கும்மியடித்து நிலவை வழிபட்ட பெண்கள் - விவசாயம், தொழில் வளம்பெறும் என நம்பிக்கை

கொங்கு மண்டலத்தில் தைப்பூசத்திற்கு முந்தைய நாள் இரவில் பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து நிலாசோறு சாப்பிடுவது வழக்கம்.
கும்மியடித்து நிலவை வழிபட்ட பெண்கள் - விவசாயம், தொழில் வளம்பெறும் என நம்பிக்கை
x
கொண்ட மண்டலத்தில் தைப்பூசத்திற்கு முந்தைய நாள் இரவில் பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து நிலாசோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடைபெற்ற நிலா சோறு வழிபாட்டில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் கலந்து கொண்டனர். அப்போது, பாடல்கள் பாடி கும்மியடித்து நிலவை வழிபட்டனர். இதன் மூலம் விவசாயம், தொழில் வளம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

திருச்செங்கோட்டில் நிலவை வணங்கும் நிலா சோறு வழிபாடு - கும்மியடித்து நிலவை வழிபட்ட இளம் பெண்கள்



இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற நிலா சோறு வழிபாட்டில் ஏராளமான இளம் பெண்கள் கலந்து கொண்டு கும்மியடித்து நிலாவை வழிபட்டனர். கும்மி பாட்டு பாடும் பழக்கம் குறைந்து வரும் நிலையில், இளம் தலைமுறையினர் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த நிலா சோறு விழா அமைந்த‌து.


Next Story

மேலும் செய்திகள்