குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தொடர்ந்து விஏஓ : விஏஓ தேர்விலும் முறைகேடு என சந்தேகம்

குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளை தொடர்ந்து, 2016 இல் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும், முறைகேடு நடந்திருக்கலாம் என தகவல்கள் வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தொடர்ந்து விஏஓ : விஏஓ தேர்விலும் முறைகேடு என சந்தேகம்
x
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக டிஎன்பிஎஸ்சி  சார்பில் கடந்த ஜனவரி மாதம்  புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார், அரசு அதிகாரிகள், காவலர்கள் என தொடர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக வழக்குபதிவு செய்து, தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முறைகேடு தொடர்பாக, விஏஓ ஒருவரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே 2016 பிப்ரவரியில், நடைபெற்ற விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் பல தகவல்கள் வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் இதுவரை கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் யாரும், விஏஓ தேர்வு தொடர்பாக தகவல் அளிக்கவில்லை எனவும், முறைகேடு நடந்து இருக்கலாம் என்கிற அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, புகார் அளிக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தயாராக இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்