"9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 06, 2020, 05:47 PM
மாற்றம் : பிப்ரவரி 06, 2020, 06:09 PM
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2015 -16ல் எட்டு சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதம் என்ற அளவில் நூறு சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம், அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவு மிக மோசமான  சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* ஆனால், 2015-16ம் ஆண்டில் 3.76 சதவீதமும்,  2016-17இல் 3.75 சதவீதமும், 2017-18இல் 3.61 சதவீதமும் தான் இடைநிற்றல் ஏற்பட்டதாக சட்டமன்றத்தில், கொள்கை விளக்கக் குறிப்புகளில் பொய்யான புள்ளி விவரங்களை அதிமுக அரசு கூறுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

* 9, 10ம் வகுப்பு மாணவர்களின் இடை நிற்றலில் ஏற்பட்ட நூறு சதவீத உயர்வை அப்படியே மறைத்து, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

* எனவே 9 மற்றும் 10ம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அவர் வலியுறுத்தி உள்ளார்.

* மேலும், எதிர்காலத்தில் ஒரு மாணவர் கூட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயகரமான, ஆரோக்கியமற்ற சூழல் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தமிழக அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

222 views

பிற செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி : 11,12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

0 views

போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் : "ரூ.14 கோடி கொரோனா நிவாரண நிதி" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளமான 14 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

10 views

வில்லிசை பாடலில் கொரோனா விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம் ஆராச்சிபட்டியை சேர்ந்த, கிராமிய வில்லிசை பாடகரான மாரியப்பன் என்பவர் பாடிய, கொரோனா விழிப்புணர்வு பாடல், கிராம மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

8 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய குழந்தைகள் - வெயிலை சமாளிக்க தண்ணீர் ஊற்றி விளையாட்டு

ஊரடங்கு ஒரு பக்கம், வெயில் மறுபக்கம் இருந்தாலும் வீடுகளுக்குள் முடங்கிய சிறுவர்கள் தண்ணீரை ஊற்றி அதில் சறுக்கி விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

7 views

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை : மக்களுக்கு சேர் போட்டு அமர வைத்த அதிகாரிகள்

புதுக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை புதுமையான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

19 views

கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட சீர்காழி சிவசிதம்பரம்

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் வெளியிட்டுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.