"மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 8 ஆம் தேதி சாமி தரிசனம் கிடையாது" - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 8 ஆம் தேதி சாமி தரிசனம் கிடையாது - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனுடன், இரண்டு தேர்களில் பவனி வர உள்ளனர். இதனால், அன்றைய தினம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வெளியூர் பக்தர்கள், பொதுமக்கள் நலன் கருதி கோவிலின் ஆயிரங்கால் மண்டப கலைக்கூடம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் எனவும், வடக்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்