ஃபோர்டு ஆராய்ச்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை அருகே ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
x
சோழிங்கநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும், அந்த மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், பொன்னாடை போர்த்தியும், மலர் கொத்து வழங்கியும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிததா அறிவித்தன் அடிப்படையில், 28 ஏக்கர் நிலப்பரப்பளவில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மையம், மோட்டார் வாகன உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தை கண்டறியவும், வர்த்தகத்தை பெருக்கவும்,  பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்