பள்ளிக்கூடம் அருகே இயங்கும் டாஸ்மாக் : பகலில் பள்ளிக்கூடம் இரவில் பார் கூடம்

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில், பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
பள்ளிக்கூடம் அருகே இயங்கும் டாஸ்மாக் : பகலில் பள்ளிக்கூடம் இரவில் பார் கூடம்
x
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில், பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால், மது குடிப்பவர்கள் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் வந்து மது அருந்துவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், அந்த பாட்டில்களை அப்புறப்படுத்தும் போது பாட்டில் குத்தி காயம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இது தொடர்பாக கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்