ஃபாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு கட்டண சலுகையா? - விசாரணையை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சுங்க சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு கட்டண சலுகையா? - விசாரணையை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
x
சுங்க சாவடிகளில், ஃபாஸ்டேக் மூலம் இருமார்க்க பயணத்திற்கு கட்டணம் செலுத்தும் போது, கட்டணச் சலுகை வழங்கி, கடந்த ஜனவரி15 ம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுற்றிறிக்கை பிறப்பித்தது. ஆனால் ரொக்கப்பணமாக செலுத்துவோருக்கு இந்த சலுகைகள் மறுக்கப்பட்டதாக கூறி ஈரோட்டை சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகை வழங்குவதை போல, தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோருவதற்கு உரிமையில்லை என தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசனம் வழங்கும் சம உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சமர்ப்பிக்க மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்