முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி - சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து விசாரணை

சேலத்தில் முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர்களை குறிவைத்து தாக்கும் சைக்கோ கொலையாளி - சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்து விசாரணை
x
சேலம் காசகாரனூரில் சாலையின் ஓரம் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாளும் பழைய பேருந்து நிலையம் அருகே தூ​ங்கிக் கொண்டிருந்த அங்கமுத்து என்ற முதியவர் அதேமுறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கொண்டு வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தேகத்திற்கிடமான 100 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்