"சி.ஏ.ஏ- இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - நடிகர் ரஜினிகாந்த்
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்தோட்டத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், சி.ஏ.ஏ தொடர்பாக அரசியல் கட்சிகள் பீதியை கிளப்புவதாக குற்றம்சாட்டினார். சில மத குருமார்களும் இதற்கு துணைபோவது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார். சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடும் மாணவர்கள், ஆராய்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ரஜினிகாந்த், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒன்று எனவும் குறிப்பிட்டார்.
Next Story

