"புதிய கல்வி கொள்கையை அ.தி.மு.க. அரசு எதிர்க்க வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை அ.தி.மு.க. அரசு எதிர்க்க வேண்டும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
x
புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிஞ்சுப் பருவத்திலேயே மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கம் முதலே தி.மு.க. வலியுறுத்தியதாக தெரிவித்தார். தற்போது திடீர் 'ஞானோதயம்' ஏற்பட்டது போல பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள அ.தி.மு.க. அரசு, இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்