வரும் 4-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் - தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
வரும் 4-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் - தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்பட உள்ள 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில், தென் மாவட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் விரிவாக்கம் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்