"23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா : விழாக்கோலத்தில் ஜொலிக்கும் தஞ்சை மாநகர்"

23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோவில் முழுமையாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா : விழாக்கோலத்தில் ஜொலிக்கும் தஞ்சை மாநகர்
x
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் , கோபுர கலசங்கள் தங்க முலாம் பூசுதல், புதிய கொடிமரம் என கடந்த ஓராண்டாக  பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது தஞ்சை பெருவுடையார் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.    தஞ்சை ராஜ ராஜ சோழன் சிலை சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அதற்கும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தஞ்சை நகரம் முழுவதும்  விழாக்கோலம் பூண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்