செங்கல்பட்டு : ரயில்வே பிளாட்பாரத்தை இடிக்க கடும் எதிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த, ரயில்வே நடைபாதையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செங்கல்பட்டு : ரயில்வே பிளாட்பாரத்தை இடிக்க கடும் எதிர்ப்பு
x
கரசங்கால் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டு  மீட்டர் கேஜ் ரயில் இருப்பு பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இந்த மீட்டர்கேஜ் ரயில்பாதை, அகல ரயில்பாதையாக கடந்த மாற்றப்பட்டதையடுத்து, மாற்றப்பட்டதால் அன்று முதல் இங்கு எந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை. இந்நிலையில், மீட்டர்கேஜ் ரயில்பாதையாக இருந்த போது அமைக்கப்பட்ட ரயில்வே பிளாட்பாரத்தை அகற்ற, ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகள் வந்தனர். இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தையும் தடுத்து நிறுத்தினர். இந்த நடைபாதையை எடுத்து விட்டால் இனி  இங்கு ரயில்கள் நிறுத்த வாய்ப்பு இல்லை என, அதனை தடுத்து நிறுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்