கோவில்பட்டி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி 5 மணி நேரத்துக்கு மேல் கனிமொழி எம்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த ஒன்றியத்தில், அதிமுக சார்பில் 9 பேரும், திமுக சார்பில் 10 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களாக, தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான, மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு, அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், வாக்குப்பதிவு நடைபெற்ற அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி தேர்தல் நடத்திய அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 5 மணி நேரமாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினரின் போராட்டம் மற்றும் மறியல் காரணமாக, ஒன்றிய துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
Next Story