சான்றிதழ்களின்றி காதலர்களுக்கு திருமணம்? - தி.மு.க பிரமுகர் நிபந்தனை மீறியதாக புகார்

ஸ்ரீரங்கம் உப கோயிலில் நடந்த காதல் திருமணத்தை தட்டிக்கேட்ட ஊழியரை தி.மு.க பிரமுகர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சான்றிதழ்களின்றி காதலர்களுக்கு திருமணம்? - தி.மு.க பிரமுகர் நிபந்தனை மீறியதாக புகார்
x
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் கோயிலுக்கு, தி.மு.க பகுதி செயலாளர் ராம்குமார் காதல் ஜோடியை அழைத்து வந்துள்ளார். அங்கு யாரும் எதிர்பாராத வகையில் காதலர்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்துள்ளார். கோயில் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் திருமணம் நடந்ததால் அதை ஊழியர்கள் மற்றும் காவலர்கள் தட்டி கேட்டனர். கோபம் அடைந்த தி.மு.க பிரமுகர்  தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்