மது கலந்த உணவு வைத்து காக்கைகள் பிடிப்பு : பிரியாணி கடைக்கா? டாஸ்மாக் பாருக்கா? என சந்தேகம்

ராமேஸ்வரம் அருகே கொத்து கொத்தாக காக்கைகள் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மது கலந்த உணவு வைத்து காக்கைகள் பிடிப்பு : பிரியாணி கடைக்கா? டாஸ்மாக் பாருக்கா? என சந்தேகம்
x
திரைப்படத்தில் வந்த இந்த காட்சியை போன்று, நிஜத்திலும் நடந்துள்ளதாக பரபரப்பு கிளம்பி உள்ளது ராமேஸ்வரத்தில்..  ராமநாதபுரம் மாவட்டம் அடுத்த ராமேஸ்வரம்- தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயில் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று. சவுக்கு மரக்காடு நிறைந்த இந்தப் பகுதியில், இங்கு உள் மற்றும் வெளிநாடு பயணிகள் உணவருந்தி ஓய்வெடுப்பது வழக்கம். அவர்கள் சிந்தும் உணவை உண்பதற்காக காக்கை உள்ளிட்ட பறவைகள் அங்கு நிறைந்திருக்கும். ஆனால், வழக்கம் போல் ஏராளமான பயணிகள் ஓய்வெடுத்த நிலையில், திடீரென காக்கைகள் கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்துள்ளன. தங்களின் உணவை உண்ட காக்கைகள் மயங்கி விழுந்ததாால், சுற்றுலா பயணிகள் பதற்றமடைந்தனர். அப்போது, அங்கு சந்தேகமான முறையில் நின்றவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சாக்கு மூட்டைக்குள் காக்கைகளை வைத்திருந்தது தெரியவந்தது. 

ஆனால், காக்கையை பிடித்தவர்களோ, தங்களின் வீட்டு விசேசத்துக்காக பிடித்ததாக கூறினர். ஆனால், மதுபான கடைகளில் விற்கும் இறைச்சிக்காக பிடிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. இதனிடையே, காக்கை மட்டும் அந்த உணவை சாப்பிடவில்லை என்றும், அங்கு வந்த சில வெளிநாட்டு பறவைகளும் உணவை சாப்பிட்டதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதனிடையே, மதுபானத்தில் மிக்சரை கலந்து வைத்து மயக்கம் மட்டும் ஏற்படுத்தி காக்கைகளை நூதனமாக பிடித்தது தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்