திருச்சி : ஆபாச படங்கள் பதிவேற்றியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குழந்தைகள் ஆபாசப் படங்கள் பதிவேற்றிய திருச்சியை சேர்நத இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி : ஆபாச படங்கள் பதிவேற்றியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
x
குழந்தைகள் ஆபாசப் படங்கள் பதிவேற்றிய திருச்சியை சேர்நத இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நிலவன், ஆதவன் நிலவன் ஆகிய சமூகவலைத்தள கணக்குகளில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் அரங்கேறின. இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் காவலர் முத்துப்பாண்டி,  மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜுவிடம் புகார் கொடுத்தார். அதையடுத்து, ஆணையர் உத்தரவின்பேரில், முகநூலில் இருந்த மொபைல் எண்ணை கொண்டு போலீசார்  திருச்சி பாலக்கரையை சேர்ந்த  கிறிஸ்டோபர் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கிறிஸ்டோபர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்