"11வது இந்து ஆன்மிக கண்காட்சி தொடக்கம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு"

சென்னை வேளச்சேரியில் 11 வது இந்து ஆன்மிக கண்காட்சி தொடங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
x
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் இந்து ஆன்மிக கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை ஜீவராசிகளைப் பேணுதல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஸ்டாலிலும் பக்தர்களைப் கவரும் வகையிலான புத்தகங்கள், ருத்ராட்சங்கள், செடிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு இலவசமாக பயணிக்கும் வகையில் துரைப்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, வேளச்சேரி, மத்தியகைலாஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இலவச ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதி, சாப்பாடு உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படுவதாக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குடும்பமாக கலந்து கொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர். 

ஆன்மிக கண்காட்சி - பக்தர்களை கவரும் அஞ்சல் துறை அரங்கு

சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் இந்து ஆன்மீக கண்காட்சியில்,  இந்திய அஞ்சல் துறையின் அரங்கு பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு, தபால் தலை சேகரிப்பவர்கள் மட்டுமின்றி, பக்தர்களை கவரும் வகையில், ராமாயணம், மகாபாரதத்தை விளக்கும் வகையிலான தபால் தலைகள், அத்திவரதர் அஞ்சல் உறை என ஆன்மிக தபால்தலைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், சாதாரண மனிதர்களின் புகைப்படமும் தபால் தலைகளாக பெறும் வகையில் மை ஸ்டாம்ப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 300 ரூபாய்க்கு 12 தபால்தலைகள் வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்