வில்சன் எஸ்.ஐ. கொலையாளிகளிடம் தொடர் விசாரணை : சமீம், தவ்பிக் வீடுகளில் கைப்பற்றிய ஆவணங்கள் எதிரொலி

வில்சன் எஸ்.ஐ. கொலையாளிகளின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, சமீம் மற்றும் தவுபிக்-டம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வில்சன் எஸ்.ஐ. கொலையாளிகளிடம் தொடர் விசாரணை : சமீம், தவ்பிக் வீடுகளில் கைப்பற்றிய ஆவணங்கள் எதிரொலி
x
களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன், சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளின் வீடுகளில் இருந்து நேற்று ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸ் காவலில் உள்ள சமீம், தவுபிக் இருவரையும் அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை வைத்து, இருவரிடமும் தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பலர் சிக்குவார்கள் என்றும், யார், யாருக்கு தொடர்பு உண்டு என்பதும் தெரியவரும் என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வரும் 31-ஆம் தேதியோடு முடியும் காவலை நீட்டிக்க கோர உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 பேர், நான்காவது நாளாக விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்