நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமானவரித்துறை வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை வருமானவரித்துறை திரும்பப் பெற்றதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமானவரித்துறை வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
x
நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என கூறி,  மூன்று நிதியாண்டுகளுக்கு சேர்த்து,  66 லட்சத்து 22 ஆயிரத்து 436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் ரத்து செய்ய கோரி நடிகர் ரஜினி காந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்,அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து,  வருமான வரித்துறை சார்பில், 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  வழக்குகளை திரும்பப் பெறுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதை தொடர்ந்து,  ரஜினிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. 


Next Story

மேலும் செய்திகள்