இந்து மகா சபாவின் தலைவர் மீது மேலும் 3 வழக்கு : பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்து மகா சபாவின் தலைவர் மீது மேலும் 3 வழக்கு : பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
x
சென்னையை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் கோடம்பாக்கம் ஸ்ரீ  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சமூக வலைதளங்களில் தன்னை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை பரப்பி வருவதாக அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் ஸ்ரீ  மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் கோடம்பாக்கம் ஸ்ரீயின் மனைவி, புகாரளித்த பெண்  மீது  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக கோடம்பாக்கம் ஸ்ரீ மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து போலீசார் விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்