ஹைட்ரோ கார்பன் : டெல்டா மாவட்டங்களில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
ஹைட்ரோ கார்பன் : டெல்டா மாவட்டங்களில் இன்று திமுக  ஆர்ப்பாட்டம்...
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில்  திமுக சார்பில் இன்று  போராட்டம் நடைபெறுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் முதல் கட்ட ஆய்வுக்கு மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை  என மத்திய அரசு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியது. கருத்துக் கேட்பு கூட்டமும் அவசியமில்லை என கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் முடிவை கண்டித்து, இன்று  திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்போவதாக  திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்