ஆனைமலை பகுதியில் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு - 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிற்கள் பாதிக்கப்படும் அபாயம்

அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால், ஆனைமலை சுற்று பகுதிகளில் பல ஏக்கரிலான நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை பகுதியில் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு - 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிற்கள் பாதிக்கப்படும் அபாயம்
x
கோவை மாவட்டம் ஆனைமலை, கோட்டூர், ரமணிமுதலிபுதூர் பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற் பயிற்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், வேளாண் துறையினர் அறுவடை இயந்திரங்களை வழக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிக வாடகைக்கு தனியார் வாகனங்கள் மூலம் நெல் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 2 ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், வேளாண் துறையினர் விரைந்து அறுவடை இயந்திரங்களை தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்