தடையை மீறி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் - தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அறிவிப்பு

தஞ்சையில் தடையை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
தடையை மீறி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் - தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அறிவிப்பு
x
திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு படி நாளை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சை ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. இதற்கு அனுமதி கேட்டும் காவல்துறைக்கு தி.மு.க. சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு இதுவரை காவல்துறை சார்பாக அனுமதி வழங்கடப்படவில்லை. இதனால்  தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் , திருவையாறு எம் எல் ஏவுமான துரை.சந்திரசேகர் அறிவித்துள்ளார். இதே போன்று புதுக்கோட்டையிலும்  ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தி.மு.க.வினரும் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கும் இதுவரை காவல்துறை சார்பில் அனுமதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்