ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு
x
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், அந்த சுற்றறிக்கைக்கும்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும்  காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்களை கேட்காமல் எந்த ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்