எஸ்.ஐ. மகள் திருமண நிகழ்ச்சியில் கொள்ளை

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சப் -இன்ஸ்பெக்டர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 50 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய்​ கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஐ. மகள் திருமண நிகழ்ச்சியில் கொள்ளை
x
சென்னை அண்ணா நகர்  பாடி புதுநகரை சேர்ந்தவர் தங்கசாமி. அவர் கிண்டியில் பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தங்கசாமியின்  மகள் திருமணம் இன்று நடைபெறும் நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி குமணன்சாவடியில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

இரவு மணப்பெண் அறையில் சென்று பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த 50 சவரன்  நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. 
மேலும் அங்கு 50 சவரன் நகைகள் வேறொரு இடத்தில் 
இருந்தது தெரியாததால் அதனை 
கொள்ளையர்கள் விட்டு சென்றுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் அங்கு பதிவான சிசிடிவி  காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்