குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை
x
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருமூர்த்தி வீட்டில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மணிகண்டன் இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு வீச முயற்சித்த மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள். அங்குள்ள  சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை  அடுத்து குருமூர்த்தியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்