சென்னை பெரியமேட்டில் பெங்களூர் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனை

சென்னை பெரியமேட்டில் பெங்களூர் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை பெரியமேட்டில் பெங்களூர் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனை
x
சென்னை பெரியமேட்டில் பெங்களூர் கியூ பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வில்சன் வழக்கில் தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த இருவர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரியவந்த தகவலின் பேரில் நேற்று இரவு சென்னை பெரியமேட்டிற்கு வருகை தந்த பெங்களூர் க்யூ பிரிவு போலீசார், அங்குள்ள பல்வேறு தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி விற்பனை செய்த இருவர் இங்கு பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும் சோதனை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்