"எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
x
மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர்,  வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழகம், பல்வேறு பாராட்டு மற்றும் சான்றிதழ்களை பெறுவதாக கூறினார். மேலும், எம்.ஜி.ஆரால் தான், அண்ணா முதல்வரானார் என்றும் தெரிவித்தார். 
 


Next Story

மேலும் செய்திகள்