"என்னைப் போன்றவர்கள் உச்சத்துக்கு வர பெரியார் காரணம்" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம்

பெரியார் குறித்து நன்கு தெரிந்துகொண்ட பிறகு அவரைப் பற்றி பேச வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
x
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற 43வது சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்றார். அப்போது, இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கவில்லை என வருந்தாமல், ஒரு நாள் உலகிற்கு அடையாளம் காட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார். உலக அளவில் புத்தக கண்காட்சி நடத்த முதல்தொகை 5 லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை தருவதாக கூறிய அவர், தொடர்ந்து தந்து கொண்டே இருப்பேன் என்றார். தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
 


Next Story

மேலும் செய்திகள்