5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் : "அந்தந்த பள்ளிகளே தேர்வு எழுதலாம்" - தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியீடு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வை எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் : அந்தந்த பள்ளிகளே தேர்வு எழுதலாம் - தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியீடு
x
நாடு முழுவதும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மைய விவகாரத்தில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை இயக்குனர் சேதுராமவர்மாவின் முரண்பட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என தொடக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றக்கூடாது எனவும் அதில் உத்தரவிட்டப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையின் அறிவிப்பால், கடந்த சில நாட்களாக நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.


Next Story

மேலும் செய்திகள்