ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்ற புதிய உத்தரவை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி டெல்டா  உள்ளிட்ட தமிழக பகுதிகளில் ஏற்கனவே 341-க்கும் மேற்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளதாக கூறியுள்ளார். 

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி  விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை நசுக்கும் இதுபோன்ற அனுமதி எதிர்கால சமுதாயத்தையும் - தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாளை கூடும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்