அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் பாதிப்பு - உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நெற்பயிர் பாதிப்பிற்கு அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் பாதிப்பு - உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தன. மழை நீர் நெற்கதிர்களை சூழ்ந்து காணப்படுவதால் அறுவடை பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நேரடி கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் அரசு திறக்காததால் அறுவடை பணிகள் தாமதமாக செய்யும் நிலை ஏற்பட்டது என குற்றம்சாட்டிய விவசாயிகள், நெற்பயிர் பாதிப்பிற்கு அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்