வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடிய இளைஞர் குத்தி கொலை - போலீசார் விசாரணை

கோவையில், பொங்கல் விழாவில் வெளியூர் வீரர்களை வைத்து, கபடி விளையாடிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடிய இளைஞர் குத்தி கொலை -  போலீசார் விசாரணை
x
கோவையில் அம்மன் குளம், தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் நவீன்குமார் என்ற இளைஞர், 3 வெளியூர் வீரர்களை வைத்து விளையாடி, வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து விஜயகுமார் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்று, நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதத்தின் போது விஜயகுமார், நவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்